Tuesday, 11 March 2014

சமுத்திரக்கனியை நம்பலாமா.. வேண்டாமா..? - திடீர் குழப்பத்தில் விஜய்..!

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

இளைய தளபதி விஜய் தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டுவருகிறது.

வருகிற தீபாவளி வெளியீடாக இப்படம் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இப்படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று ஏற்கெனவே
பேசப்பட்டுவந்தது.

குறிப்பாக சிம்புதேவன் இயக்கவுள்ள படத்தின் கதை, நாயகி, இசையமைப்பாளர் என அனைத்துமே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அடிக்கடி கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

ஆனால் தற்பொழுது பரவிவரும் கிசுகிசுக்களின் அடிப்படையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறாராம் விஜய்.

விஜயின் 58 ஆவது படமான அப்படத்தினைப் பற்றிய அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

துப்பாக்கி படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோர் இணைந்திருக்கும் விஜயின் 57 ஆவது படமான இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக
நடித்துவருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் பல்வேறு தடைகளையும் தாண்டி கடந்த மார்ச் 8ல் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், அனைத்துத் தரப்பு விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டுவருகிறது.
இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

0 comments:

Post a Comment

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…