Monday, 3 March 2014

கடவுளிடம் மனைவியுடன் சரண்டைந்த பிரபல டைரக்டர்..!

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

பிரபல மலையாள டைரக்டர் பிரியதர்சன். இவர் தமிழில் நடிகர் கார்த்திக் நடித்த ‘கோபுர வாசலியே’, நடிகை ஜோதிகா நடித்த ‘சினேகிதியே’, நடிகர் ஷாம் நடித்த ‘லேசா...லேசா’ போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

இவரது மனைவி பிரபல மலையாள நடிகை லிசி. இவர் நடிகர் கமலஹாசனுடன் தமிழில் ‘விக்ரம்’, பிரபுவுடன் ‘மனசுக்குள்ள மத்தாப்பு’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர்கள் மண வாழ்க்கையில் புயல் வீசியது. பிரியதர்சனும், லிசியும் விவாகரத்து பெறப்போவதாகவும் தகவல்கள் பரவியது. அவர்கள் இருவரையும் நடிகர் கமலஹாசன் சந்தித்து சமரசப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து பிரியதர்சனும், லிசியும் விவாகரத்து எண்ணத்தை கைவிட்டனர். இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்சாலை நாகராஜா கோவிலுக்கு டைரக்டர் பிரியதர்சன், தனது மனைவி லிசியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

நாகராஜாவுக்கு அவர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அதன்பிறகு கோவில் வளாகத்தில் உள்ள மன்னார்சாலை வீடு என்ற ஆசிரமத்திற்கு அவர்கள் சென்றனர். அங்குள்ள பெண் சாமியார் மன்னார்சாலை அம்மா என்றழைக்கப்படும் உமாதேவி அந்தர்ஜனத்தை சந்தித்து ஆசி பெற்றனர்.

மேலும் அவரிடம் பிரியதர்சனும், லிசியும் குறி கேட்டனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 
இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

0 comments:

Post a Comment

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…