Thursday 5 June 2014

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை...! - தெரிந்துகொள்வோம்



பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கொய்யாவோடு சேர்ந்த இலையும் மணம் பெறும். கொய்யாபழம் என்றதும் அதனுடைய  இலைகளையும் சேர்த்து தான் நமக்கு நினைவு வரவேண்டும்.

 அந்த அளவுக்கு கொய்யா இலை மருந்தாக பயன்படுகிறது.

நீரிழிவுநோயால்  அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை.

கொய்யாஇலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல., பல அற்புதமான குணாதிசயங்களை கொண்டுள்ளது. காயங்கள், பல் வலி ஈறு வீக்கம்  வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யாஇலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்துவிடும் சிறந்த  உணவாகும். இதயநோய், புற்றுநோய், அல்சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட  வேண்டும். பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம். மேலும் பெண்கள் தங்கள் உறுப்புகளை கழுகவும் பயன்படுத்தலாம். ஏனெனில் நோய் கிருமிகளை அழிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

கொய்யா இலையின் பயன்பாடுகள்:

நீரிழிவை கட்டுப்படுத்தும்: கொய்யாஇலை ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப்படுத்தியுள்ளது. இது நிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சம் தன்மை கொண்டது. மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளது.

குறுகிய கால பயன்கள்:  வெள்ளை சாதத்தை உட்கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு 30,  90 மற்றும் 120 நிமிடத்தில் குறைக்கக்கூடியதட தன்மையை கொண்டுள்ளது.  

நீண்ட கால பயன்கள்: இந்த கொய்யாஇலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள  சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது.

பாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்...? - இதப்படிங்க...!




பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என்றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துதலை விட வெளியேற்றுவதே நல்லது. இதில் ஒரு முறைதான் சிரித்து வெளியேற்றுதல் என்பது.

பொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடும். உதாரமான ஒரு சிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினைத்தால் என்ன ஆகும்? அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போகும் அல்லது அது அடங்கியது போல நடிக்கும்.

ஆனால் இப்படி விளையாடும் பொழுதும், பேசும்பொழுதும், அவனை சற்று வெறுமனே, எதுவும் கூறாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் சற்று போக்கிரித்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமாகப் பேசக்கூடும். அந்த எல்லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவேண்டும் இல்லையா?

ஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வைக் கண்டிக்காமல், அடக்காமல் அதன் போக்கை மனக்கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்படித்தான் அதைச் சாந்தபடுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுணர்வுச் சக்தி வேறு வகையில் மெல்ல மாறிவிடும் & விளையாட்டு, டி,வி. பார்த்தல் போன்றவைசகளில்.

அப்படியும் சாந்தபடுத்த முடியவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் சென்று விடுங்கள்! சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்ற உணர்வு தேவை இல்லாதது.

மும்பை பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம் : வேடிக்கை பார்த்த பயணிகள்..!




தானே: மும்பை அருகே அரசு போக்குவரத்துக் கழக பேருந்தின் பெண் கண்டக்டரை பயணி ஒருவர் அடித்து உதைத்து, ஆடையை கிழித்து மானப்பங்கம் செய்ததை மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை அடுத்துள்ள தானே மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்யாணிலிருந்து  பன்வேல் செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இன்று காலை 8.30 மணி அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. அந்த பேருந்தில் 34 வயது பெண் கண்டக்டர், அப்பொழுதுதான்  தனது முதல் டிரிப் பணியை தொடங்கினார்.

இங்குள்ள பேருந்துகளில், பயணிகள் பின்பக்கமாக ஏறி, முன்பக்கமாக இறங்குவதுதான் நடைமுறையாக உள்ளது. இந்நிலையில் 30 வயதுடைய அபிஷேக் சிங் என்பவர் வழியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் வழக்கமாக ஏறும் பின்பக்க வாசலுக்கு பதிலாக முன்பக்கமாக ஏறியுள்ளார். அவர் அவ்வாறு ஏறியதை பார்த்த டிரைவர் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அவரை அபிஷேக் சிங் மரியாதைக்குறைவாக பேசியுள்ளார்.

இதனையடுத்து பெண் கண்டக்டர் அபிஷேக் சிங்கை பார்த்து, ' உனது தந்தை வயதுடைய டிரைவரை மரியாதைக் குறைவாக பேசுகிறாயே...?' என கண்டித்து, பேருந்தைவிட்டு இறங்குமாறு கூறியுள்ளார். உடனே ஆத்திரமடைந்த அபிஷேக் சிங், அந்த பெண் கண்டக்டரை தாக்கி, ஆடையை கிழித்து மானப்பங்கப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் கண்டக்டர் கூறுகையில், ' பேருந்திலிருந்து இறங்குமாறு நான் கூறியதும் அந்த நபர் எனது காலை பிடித்து பேருந்திலிருந்து கீழே இழுத்து போட்டார். பின்னர் எனது ஆடைகளை கிழித்து என்னை அடித்து உதைத்தார். எனது பேருந்துக்கு பின்னால் மற்றொரு பேருந்து நின்றுகொண்டிருந்தது. என்னை அடித்து உதைத்தை பார்த்து, அந்த பேருந்திலிருந்த பெண் கண்டக்டர் என்னை காப்பாற்ற ஓடிவந்தார். ஆனால் அவரையும் அந்ந நபர் அடித்து தாக்கினார். இந்த சம்பவம் நடந்தபோது ஏராளமான பயணிகள் அங்கு நின்றனர். ஆனால் அவர்கள் வேடிக்கை பார்த்தனரே தவிர என்னை காப்பாற்ற வரவில்லை.

பின்னர் அங்கு ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை பார்த்து, அங்கு அப்போதுதான் வந்த சில மாணவர்கள்தான் ஓடிவந்து என்னை  காப்பாற்றி,அந்த நபரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்' என நடந்ததை நடுக்கத்துடன் விவரித்தார். இந்த சம்பவத்தில் பெண் கண்டக்டரை பயணி ஒருவர் மானப்பங்கப்படுத்தியது ஒருபுறம் வேதனையான சம்பவம் என்றால், அதனை தடுக்க முயற்சிக்காமல் மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்தது அதைவிட கொடுமையாக உள்ளது.

உஷ்ணம் குறைக்கும் வெந்தய - மோர் பானம்...!

உஷ்ணம் குறைக்கும் வெந்தய - மோர் பானம்:-


தேவையான பொருட்கள் :

  • வெந்தயம்- 1 கப் 
  • மிளகு-1/4கப் 
  • சுக்கு-சிறு துண்டு 
  • மோர் - 1 கப்


செய்முறை :

• வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

• ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

• கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.

இரவில் பால் குடிக்கலாமா..? - தெரிந்துகொள்ள இதப்படிங்க...!


டாக்டர்களில் சிலர் இரவில் பால் சாப்பிடலாம் என்கிறார்கள். இன்னும் சில டாக்டர்கள் இரவில் பால் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். எது சரி?

'இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார், யார் பால் சாப்பிடக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன.

என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகமாட்டேங்குதே என்று வருத்தப்படுகிறவர்கள், இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.

வளரும் குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சி பெற இரவில் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.

பால் என்பது ஒரு வகையில் மயக்கத்தைக் கொடுக்கிற பானம். வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.

ஆனால், உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள், உடல் இளைக்க வேண்டும் என்று நினக்கிறவர்கள், உடல் உழைப்பு நிறய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

வெற்றிலை போடுவது ஏன்..? - என்பதற்கான காரணம் இதோ உங்களுக்காக...!




பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

 
இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…